Admin-message Email:Slmuslims1st@gmail.com SMS 0777259707 - call: 0777259707 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel
Home » , , , , , , , , , , , , , » தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரர்கள்!- நெகிழவைக்கும் வீடியோ (Video)

தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரர்கள்!- நெகிழவைக்கும் வீடியோ (Video)

Written By ADMIN on Saturday, January 9, 2016 | 5:33:00 PM




கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரியாவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) அமைப்பு சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து கொலை செய்து வருகிறது.

இந்நிலையில் கென்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மண்டேரா அருகில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பேருந்தை மறித்துள்ளனர்.

உடனடியாக பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள் தங்களின் உடைகளை கிறிஸ்தவர்களிடம் கொடுத்து அணிந்து கொள்ள கூறினர். பேருந்திற்குள் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தனிதனியாக பிரிந்து நிற்குமாறு கூறியுள்ளனர். அதற்கு மறுத்த இஸ்லாமியர்கள் சுடுவதாக இருந்தால் எங்கள் அனைவரையும் ஒன்றாக சுடுங்கள் அல்லது விடுதலை செய்வதாக இருந்தாலும் எங்கள் அனைவரையும் ஒன்றாக விடுதலை செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த தீவிரவாதிகள் மீண்டும் வருவதாக எச்சரித்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர்.

எனினும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்து ஆண்டு பேருந்தை மறித்த தீவிரவாதிகள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்த 36 கிறிஸ்தவர்களை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அரங்கம் நியுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்-அரங்கம் நியுஸ் இலங்கை நீங்களும் காணும் செய்திகளை உடன் அனுப்பி வையுங்கள் Arankamnews@gmail.com உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் இடவும்

    0 comments:

    இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

    Tell us what you're thinking... !

    Like On Facebook

    விளம்பரம்

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Twitter News

    Facebook இல் like here செய்யுங்கள்

    Total Pageviews